இந்தியா

ரூ.3,500 கோடி பேரிடர் நிவாரணத் திட்டம் அறிவிப்பு: ஹிமாசல் முதல்வர்

ஹிமாசல பிரதேசத்தில் ஜூலை 7 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் மழை தொடர்பான பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.3,500 கோடி சிறப்பு தொகுப்பை முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அறிவித்தார்.

DIN

சிம்லா: ஹிமாசலில் கடந்த ஜூலை 7ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மழை தொடர்பான பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.3,500 கோடி சிறப்பு தொகுப்பை முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இன்று அறிவித்தார்.

மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தடுப்புச் சுவர் கட்ட ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். வீடுகள், விவசாயம் நிலம் அல்லது பயிர்கள் சேதமடைந்திருந்தாலும், பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் வருமான வரம்பைப் பொருட்படுத்தாமல் சிறப்பு தொகுப்பிலிருந்து உதவி வழங்கப்படும் என்றார்.

இந்த காலகட்டத்தில் 3,500 வீடுகள் முழுமையாகவும், 13,000 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளதாகவும், சேவைகளை தற்காலிகமாக சீரமைக்க தனது சொந்த நிதியில் இருந்து இதுவரை ரூ.1,850 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், விரைவில் ரூ.1,051 கோடி விடுவிக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

SCROLL FOR NEXT