முகப்பு
இந்தியா

இம்ரான் கானின் நீதிமன்றக் காவல் செப்.13 வரை நீட்டிப்பு!

சைபர் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 13-ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:09 PM
பகிர்:

சைபர் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 13-ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இம்ரான் கானின் பதவிக் காலத்தில் வெளிநாட்டு தலைவா்கள் வழங்கிய விலை உயா்ந்த பரிசுப் பொருள்களை மறைத்து வைத்ததாகவும், அரசுக் கருவூலமான தோஷகானாவிடமிருந்து பரிசுப் பொருள்களை குறைந்த விலையில் வாங்கி சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்றதாகவும் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு, 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் உடனடியாக கைது செய்யப்பட்டு, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார்.

மாவட்ட செசன்சு கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இம்ரான்கானை உடனடியாக விடுவிக்குமாறு சிறைத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். ஆனால், இம்ரான்கான் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனால் அவரை சிறையிலிருந்து விடுவிக்கவில்லை. 

இந்நிலையில், பாகிஸ்தானின் அரசு ரகசியங்களை வெளியிட்டது தொடர்பான வழக்கு விசாரணைக்கு இன்று காலை இம்ரான்கான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, சைபர் வழக்கில் இம்ரான்கானின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 13-ம் தேதி வரை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.