நீக்கப்பட்ட ஜவாஹர்லால் நேரு புகைப்படம்! பாஜக மீது குற்றச்சாட்டு!
மத்தியப் பிரதேச மாநில சட்டப் பேரவையிலிருந்து ஜவாஹர்லால் நேருவின் புகைப்படத்தை பாஜக நீக்கியுள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநில சட்டப் பேரவையிலிருந்து முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் புகைப்படத்தை நீக்கியதற்கு காங்கிரஸ் கட்சியினர் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். பாஜக-வினர்தான் இதைச் செய்திருக்க வேண்டும் எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ஜெய்வரதன் சிங், 'பாஜக-வாக இருந்தாலும் யாராக இருந்தாலும், ஜவாஹர்லால் நேருவின் புகைப்படத்தை நீக்கியது தவறு. இன்று இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம் வலுவாக இருப்பதற்கு ஜவஹர்லால் நேருதான் காரணம்' எனக் கூறினார். மேலும் இதுகுறித்து சபாநாயகரிடம் பேசவிருப்பதாகக் கூறீனார்.
இதையும் படிக்க: காங்கிரஸ், சிபிஎம் மோதல்: தெருச்சண்டையான சச்சரவு!
Advertisement
Advertisement
ஜவாஹர்லால் நேருவின் புகைப்படத்தை நீக்கிவிட்டு அம்பேத்கரின் புகைப்படம் நிறுவப்பட்டுள்ள நிலையில், 'விரைவில் பாஜக அம்பேத்கர் புகைப்படத்தையும் நீக்கிவிட்டு கோட்சேவின் புகைப்படத்தை வைப்பார்கள்' எனக் காங்கிரஸ் தலைவர் உமாங் சிங்கார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சட்டபேரவையில் சிறப்புக் குழு உள்ளது, அந்த குழு முடிவினை எடுக்கும் என சபாநாயகர் கோபால் பார்கவா தெரிவித்துள்ளார்.
மேலும், மத்தியப் பிரதேசத்தின் துணை முதல்வர் ராஜேந்திர ஷுக்லா, 'அம்பேத்கரின் புகைப்படத்தை வைத்ததில் தவறில்லை. ஜவாஹர்லால் நேருவின் புகைப்படத்தை எங்கு நிறுவலாம் எனக் குழு முடிவு செய்யட்டும்' எனத் தெரிவித்துள்ளார்.'
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.