அமர்நாத் யாத்திரை தொடங்கியது! (புகைப்படங்கள்)
அமர்நாத் யாத்திரையின் முதல் குழு பால்தால் முகாமில் இருந்து இன்று காலை தொடங்கியது.
அமர்நாத் யாத்திரையின் முதல் குழு பால்தால் முகாமில் இருந்து இன்று காலை தொடங்கியது.
தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் பக்தர் புனித யாத்திரை மேற்கொள்வார்கள்.
அந்தவகையில், இந்தாண்டுக்கான யாத்திரை இன்று முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி 62 நாள்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்யலாம்.
இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் வழியாக ஆளுநர் முதல் குழு பயணத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் இன்று மத்திய காஷ்மீரில் உள்ள பால்தால் முகாமில் இருந்து முதல் குழு புறப்பட்டுள்ளது.
பக்தர்கள் ஹர ஹர மகாதேவ் என்ற கரகோஷத்துடன் குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க உற்சாகத்துடன் செல்கின்றனர்.