சந்திரயான்-3: உதிரிபாகங்களை வழங்கிய எல்&டி நிறுவனம்
சந்திரயான்-3 விண்கலத்திற்கு பல்வேறு உதிரிபாகங்களை லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் வழங்கியுள்ளது.
புதுதில்லி: சந்திரயான்-3 விண்கலத்திற்கு பல்வேறு உதிரிபாகங்களை லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் வழங்கியுள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:
போவாயில் உள்ள தொழிற்சாலையில், 'மிடில் செக்மென்ட் மற்றும் நாசில் பக்கெட் பிளேஞ்ச்' போன்ற உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டதாகவும், தரை மற்றும் விமான தகடுகள் போன்ற உதிரிபாகங்கள் கோவையில் உள்ள ஏரோஸ்பேஸ் உற்பத்தி மையத்தில் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எல்&டி டிஃபென்ஸ் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவரும், தலைவருமான ராம்சந்தனி பேசுகையில், விண்வெளித் துறை இந்தியத் தொழில்துறைக்கு திறக்கப்பட்டு வருகின்ற நிலையில், இஸ்ரோவுடனான இந்த நீண்ட கால தொடர்பால், எதிர்காலத்தில் விண்வெளித் திட்டங்களில் நாங்கல் பெரிய பங்கை வகிப்போம்.
இஸ்ரோவின் சந்திரயான் -1 மற்றும் 2, ககன்யான் மற்றும் மங்கள்யான் திட்டங்களுக்கான பலவிதமான மென்பொருள் தயாரிப்பிலும் எல்&டி ஈடுபட்டது என்றார்.
இந்தியாவின் சந்திரயான்-3, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்தில் இருந்து ஜூலை 14-ம் தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.