கர்நாடக அமைச்சரவை குறித்து முடிவு செய்ய சித்தராமையாவும் டி.கே.சிவகுமாரும் தில்லி சென்றுள்ளனர்.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வர் பதவிக்கு போட்டி நிலவி வந்த நிலையில் கர்நாடக முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் ஒருமனதாக தேர்வாகியுள்ளனர்.
இதையடுத்து பெங்களூருவில் நாளை (மே 20) பிற்பகல் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
முதல்வர், துணை முதல்வர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அமைச்சர்களை தேர்வு செய்ய சித்தராமையாவும் டி.கே.சிவகுமாரும் தில்லி சென்றுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அமைச்சரவை தேர்வு குறித்து அவர்களிடம் ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.