முகப்பு
இந்தியா

ஜார்க்கண்டில் உணவு விஷமானது: 150 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாரியாவில் உள்ள உறைவிடப் பள்ளியில் இரவு உணவு சாப்பிட்ட சுமார் 150 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:03 AM
ஜார்க்கண்டில் உணவு விஷமானது: 150 மாணவர்கள் மருத்துமனையில் அனுமதி!
பகிர்:

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாரியாவில் உள்ள உறைவிடப் பள்ளியில் இரவு உணவு சாப்பிட்ட சுமார் 150 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஜாரியாவில் உறைவிடப் பள்ளி ஒன்று இயங்கிவருகின்றது. இந்த நிலையில் நேற்றிரவு பள்ளியில் இரவு உணவு வழங்கப்பட்டதையடுத்து, அதை
உட்கொண்ட சுமார் 150 மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹாட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

பின்னர், பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் உணவில் பல்லியின் ஒருபகுதி இருந்ததாகவும் அதனால், உணவு விஷமாகி உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் புகார் தெரிவித்தார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →