வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை காலக்கெடு 
இந்தியா

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் என்னவாகும்?

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாவிட்டால்..

இணையதளச் செய்திப் பிரிவு

கடந்த நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான அல்லது கடந்த 2020-21ஆம் நிதியாண்டின் புதுப்பிக்கப்பட்ட வருமான வரித்தாக்கலை பதிவு செய்வதற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவுபெற்றுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட வருமான வரித்தாக்கலுக்கு மார்ச் 31ஆம் தேதியே கடைசி நாள் என்பது வரி செலுத்துவோர் நன்கு அறிந்தே இருப்பர்.

பொதுவாக, புதுப்பிக்கப்பட்ட வருமான வரித் தாக்கலுக்கு 50 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். இந்த மார்ச் 31 வாய்ப்பையும் தவறுவோருக்கு 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த சிக்கல்கள் மிகத் தீவிரமாகும்போது, வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யத் தவறுவோர் சிறைத் தண்டனை கூட விதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யாத பெண் ஒருவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வருமான வரிக் கணக்கைத்தாக்கல் செய்யாதவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று பொருளாதார நிபுணர்களும் எச்சரிக்கிறார்கள். அதாவது, வேண்டுமென்றே, தெரிந்தே வருமான வரிக்கணக்குத்தாக்கல் செய்யாதவர்கள், தவறான கணக்குகளை காண்பித்தவர்கள், வருமானத்தை மறைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு வருமான வரித்துறை கடுமையான தண்டனைகளை விதித்து வருகிறது.

ஒருவேளை, ஒரு நபர், வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்யாதிருப்பினும், ஐடிஆர்-யு தாக்கல் செய்யாவிட்டால் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்படாது. ஏனென்றால், ஐடிஆர்-யு தாக்கல் செய்வது அனைவருக்கும் கட்டாயமல்ல.

ஆனாலும், யாராவது வருமானத்தை மறைத்தது போன்ற மோசடிகளை மேற்கொண்டது வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடிக்க நேரிட்டால் அதன் அடிப்படையில் தண்டனை விதிக்கப்படும்.

வருமான வரித் தாக்கலில், அனைவரும் சரியான வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் சிக்கல்களை எதிர்கொள்வதிலிருந்து தப்பிக்கலாம், வரி செலுத்துவோர், வருமன வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கு அதிக கவனம் செலுத்தி, உரிய காலத்துக்குள் சரியான கணக்கைத் தாக்கல் செய்ய வண்டும்.

எனவே, வரி செலுத்தும் ஒவ்வொருவரும் கீழ்காணும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

வருமான வரித்துறையினர் வெளியிடும் அறிவிப்புகள் மற்றும் கால அவகாசம் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளுதல். இதற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தையும் அவ்வப்போது பார்க்கலாம்.

அனைத்து வருமானம் மற்றும் செலவினங்கள் மற்றும் வரித் தொடர்பான ஆவணங்களை ஒவ்வொருவரும் பத்திரமாக ஆவணப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வருமான வரிக் கணக்கைத்தாக்கல் செய்யும்போது எவ்வித தவறான கணக்குகள் பதிவாவதும், தவறுகள் நேரிடுவதும் தவிர்க்கப்படும்.

வருமான வரித் தாக்கல் அல்லது விதிமுறைகளில் சந்தேகம் இருப்பின், பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையைப் பெறலாம், இதன் மூலம் தவறுகள் நேரிடாமல் தடுக்கலாம்.

வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் முன், அனைத்து விவரங்களையும் ஒன்றுக்கு இரண்டு முறை பரிசோதித்துக் கொள்ளுங்கள். கணக்கிடுதல், வரிக் கழிப்பு உள்ளிட்ட அனைத்தையும் தவறில்லாமல் பதிவு செய்வதும் அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலி டேட்டிங் செயலி மூலம் மோசடி: உகாண்டா நபா் கைது

தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்தில் கூடுதல் வசதிகள் தொடங்கிவைப்பு

கண்ணழகு... திரிஷ்யா!

ரூ.17,884.76 கோடி இழப்பை சந்தித்த இண்டிகோ நிறுவன பங்குகள்!

மயக்கும் மான்விழி அம்புகள்... மௌனி ராய்!

SCROLL FOR NEXT