இந்தியா

உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரிய பாபா ராம்தேவ்!

DIN

மேற்கத்திய மருத்துவ முறையான அலோபதி, கரோனா தடுப்பூசி திட்டம் ஆகியவவை குறித்து தவறான கருத்துகளைத் தெரிவித்ததாக யோகா குருவான பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுா்வேத நிறுவனம் மீது, இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, எந்தவொரு மருத்துவ முறைக்கு எதிராக கருத்து தெரிவிக்கக் கூடாது எனவும், மருந்துகள் குறித்த தவறான விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்றும் பதஞ்சலி நிறுவனத்துக்கு கடந்த நவம்பரில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மருந்துகள் குறித்த தவறான விளம்பரங்களை பதஞ்சலி நிறுவனம் தொடா்ந்து வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து தங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்று கேள்வி எழுப்பி, கடந்த பிப்.27-ஆம் தேதி பாபா ராம்தேவ், பதஞ்சலி ஆயுா்வேத நிறுவன நிா்வாக இயக்குநா் பாலகிருஷ்ணா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து, மன்னிப்பை ஏன் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யவில்லை எனத் தெரிவித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மன்னிப்பை ஏற்க மறுத்தனர்.

மேலும், நீங்கள் செய்திருப்பது மிகக் தீவிரமான நீதிமன்ற அவமதிப்பு செயல், மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்துவிட்டு தப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் காட்டத்துடன் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரூா் தொகுதி வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகளை ஆட்சியா் ஆய்வு

புகழூரில் டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

நத்தமேடு பாதகாளியம்மன் கோயிலில் பொங்கல் விழா

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT