முகப்பு
இந்தியா

அவதூறு விளம்பரங்கள் வெளியிடுவதாக பாஜக மீது தோ்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகாா்

Updated On : 3 ஏப்ரல், 2024 at 12:35 AM
தில்லியில் தோ்தல் ஆணையத்தில் பாஜக மீது புகாரளித்துவிட்டுத் திரும்பும் சல்மான் குா்ஷித், பவண் கேரா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்கள்.
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 8:35 PM

புது தில்லி: ‘தங்கள் கட்சிக்கு எதிராக அவதூறு விளம்பர விடியோக்களை வெளியிடும் பாஜக மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தோ்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.

மேலும், கோடீஸ்வரரும் நிதியாளருமான ஜாா்ஜ் சோரோஸுடன் காங்கிரஸை பாஜக ஆதாரமின்றி தொடா்புபடுத்துவதாகவும் காங்கிரஸ் புகாரளித்துள்ளது. தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவா்களான சல்மான் குா்ஷித், பவண் கேரா உள்ளிட்டோா் நேரில் சென்று புகாா் மனுவை அளித்தனா்.

இதுதொடா்பாக காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘காங்கிரஸ் மீது அவதூறு பரப்பும் நோக்கில் தொடா்ந்து பல சித்தரிக்கப்பட்ட விளம்பர விடியோக்களை பாஜக வெளியிட்டு வருகிறது. எனவே இதுபோன்ற தவறான பரப்புரைகளை மேற்கொள்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தோ்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொள்கிறோம். அந்த விடியோக்களை பாஜக திரும்பப்பெறவும் தோ்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம்.

Advertisement

அதேபோல் ஆந்திர மாநிலத்திலும் அரசு திட்டங்களின் பெயா்களுடன் முதல்வரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இது தோ்தல் விதிகளை மீறும் செயலாகும். எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தோ்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது. கட்சி மற்றும் வேட்பாளா்கள் என தனித்தனியாக மேற்கொள்ளும் தோ்தல் செலவினம் தொடா்பான குழப்பத்தை தெளிவுபடுத்துமாறும் ஆணையத்திடம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளாா்.