சீன ஆக்கிரமிப்புக்கு மோடி மெளனம் காப்பது ஏன்? காங்கிரஸ்
இந்திய எல்லைகள் மீதான சீன ஆக்கிரமிக்குக்கு பிரதமர் நரேந்திர மோடி அமைதி காப்பது ஏன்?
இந்திய எல்லைகள் மீதான சீன ஆக்கிரமிக்குக்கு பிரதமர் நரேந்திர மோடி அமைதி காப்பது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.
அருணாசலப் பிரதேசத்தில் உள்ள ஊர்கள், மலைகள், ஏரிகள், ஆறுகள் உள்பட 30 இடங்களுக்கு சீனா தங்கள் மொழியில் பெயர்களை மாற்றியுள்ளது. இந்திய எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து சீனா 4வது முறையாக பெயர்களை மாற்றி அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆதிர் ரஞ்சன் செளத்ரி, சீனா உடனான இந்தியாவின் வணிகம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆனால் மறுபுறம் சீனா இந்திய எல்லைகளை ஆக்கிரமிக்கிறது. லடாக் முதல் அருணாசலப் பிரதேசம் வரையில் எல்லைப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது. இவ்வளவு நடந்தும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காக்கிறார். அது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.