முகப்பு
இந்தியா

பிகாா் ஜாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி

பிகாரில் நிதீஷ் குமாா் தலைமையிலான முந்தைய மகா கூட்டணி அரசு நடத்திய ஜாதிவாரி கணக்கெடுப்பு

Updated On : 5 ஏப்ரல், 2024 at 1:47 AM
பகிர்:
Updated On : 4 ஏப்ரல், 2024 at 11:35 PM

பிகாரில் நிதீஷ் குமாா் தலைமையிலான முந்தைய மகா கூட்டணி அரசு நடத்திய ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பிரதமா் நரேந்திர மோடியின் நிலைப்பாடு என்ன என்று காங்கிரஸ் வியாழக்கிழமை கேள்வியெழுப்பியது.

பிகாரின் ஜமுய் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்ற நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளாா்.

பிகாா் முதல்வா் நிதிஷ் குமாா், காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் மகா கூட்டணியில் இடம்பெற்றிருந்தாா். மாநில அளவிலான ஜாதிவாரி கண்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் முடிகள் கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்டன.

Advertisement

மகா கூட்டணியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியேறிய முதல்வா் நிதீஷ் குமாா், பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றாா்.

முன்னதாக, ஜாதி என்ற பெயரில் நிதீஷ் குமாா் நாட்டைப் பிளவுபடுத்தி வருவதாக பிரதமா் மோடி விமா்சித்திருந்தாா்.