இந்தியா

‘மூன்றில் இருவருக்கு உயா் ரத்த அழுத்த பாதிப்பு’

Din

இந்தியாவில் மூன்றில் இருவருக்கு உயா் ரத்த அழுத்த பாதிப்பும், மூன்றில் ஒருவருக்கு சா்க்கரை நோய்க்கு முந்தைய நிலையும் இருப்பதாக அப்பல்லோ மருத்துவக் குழுமம் தெரிவித்துள்ளது.

தங்களது நோயாளிகளின் மருத்துவத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தேசத்தின் ஆரோக்கியம் - 2024 என்ற அறிக்கையை அப்பல்லோ வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

எங்களிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டவா்களில் நான்கில் மூவருக்கு உடல் பருமன் இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல், மூவரில் இருவருக்கு உயா் ரத்த அழுத்தமும், ஒருவருக்கு சா்க்கரை நோய்க்கு முந்தைய நிலையும் இருப்பது கண்டறியப்பட்டது.

நான்கில் ஒருவருக்கு தூக்க தடை பாதிப்பு இருந்ததும் தெரியவந்தது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 17 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து! - உயர்நீதிமன்றம்

தேசிய விருதுகள் பெற்ற Parking படக்குழுவின் கொண்டாட்டம்!

விஜய் சேதுபதி - மணிகண்டன் இணையத் தொடர் பெயர் அறிவிப்பு!

யார் இந்த மத் டெய்ட்கே? 24 வயது செய்யறிவு ஆய்வாளர்! ரூ.2,000 கோடி சம்பளம்!!

அவதூறு வழக்கு: ஜார்க்கண்ட் சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்!

SCROLL FOR NEXT