கோப்புப் படம்.
கோப்புப் படம். 
இந்தியா

மேற்கு வங்கத்தில் என்ஐஏ அதிகாரிகள் மீது தாக்குதல்: காவல்துறையினர் வழக்குப்பதிவு

DIN

மேற்கு வங்கத்தில் விசாரணைக்குச் சென்ற என்ஐஏ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேற்கு வங்கத்தின் பூபதிநகர் பகுதியைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் தலைவர் வீட்டில், 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்த வழக்கில் விசாரனைக்கு ஆஜராகுமாறு திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் 8 பேருக்கு தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) கடந்த மாதம் அழைப்பாணை விடுத்திருந்தது.

இதனிடையே, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் இருவரை இன்று அதிகாலை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர்களைச் செல்ல விடாமல் அப்பகுதி மக்கள் தடுத்ததால் பதற்றமான சூழல் நிலவியது.தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகளின் வாகனங்களைச் சூழ்ந்துகொண்ட உள்ளூர் மக்கள், அவர்களை முன்னோக்கிச் செல்ல விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

சிலர் அதிகாரிகளின் வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியதில் வாகனங்கள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அதிகாரிகள் சிலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புப்படையினருடன் அப்பகுதியில் உள்ள பெண்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டதோடு, காவல்துறை வாகனங்களை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரத்தில் மிட்னாபூர் மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உள்ளூர் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மோனோபிரதா ஜனா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

கடலோரக் காவல்படை வீரா்களிடையே டென்னிஸ் போட்டி

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT