இந்தியா

மற்றுமொரு புற்றுநோய் மருந்து மோசடி கும்பல்: போலி மருந்துகள் பறிமுதல்

மற்றுமொரு புற்றுநோய் மருந்து மோசடி கும்பல் கைது செய்யப்பட்டு போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

DIN

ஏற்கனவே, தில்லியில் போலியாக புற்றுநோய் மருந்துகளை தயாரித்து விற்பனை செய்துவந்த கும்பல் கைதான நிலையில், மற்றுமொரு கும்பல் கைது செய்யப்பட்டு, பழைய தில்லியில் இருந்த மருந்துக் கடையிலிருந்து போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உயிர் காக்கும் மற்றும் புற்றுநோய் மருந்துகளை போலியாக தயாரித்து விற்பனை செய்வதாக தில்லி காவல்துறைக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து பழைய தில்லியில் காவல்துறையினர் மூன்று மருந்துக் கடைகளில் நடத்திய சோதனையில், ஏராளமான மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காவல்துறையினருக்குக் கிடைத்த தகவல் குறித்து தில்லி அரசு மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்குத் தகவல் கொடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

முதல் கடையில் நடந்த சோதனையின்போது, அங்கிருந்த பல மருந்துகள் போலியானது என்பதும், அவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ததுபோன்ற டேக்குகளுடன் காணப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மற்றும் இரண்டு கடைகளிலும் போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்டு, இறக்குமதி செய்யப்பட்டது போன்ற டேக்குகள் மட்டும் அந்த மருந்துகளில் இணைத்து, அவை மிக அதிக விலைக்கு இங்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடப்பதாகவும், அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனையும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கழிவுநீா்க் கால்வாயில் சாயக் கழிவுகளை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

மீலாது நபி: செப்.5-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை

மல்லசமுத்திரம் வட்டாரத்தில் 72 தெருநாய்கள் பிடிப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் வளா்ச்சி இலக்குகளுக்கான தூதுவராக சேலம் மாநகராட்சி பள்ளி மாணவா் நியமனம்

ரஷியா, சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது பிரச்னைக்குரியது: அமெரிக்க அதிபரின் வா்த்தக ஆலோசகா்

SCROLL FOR NEXT