முகப்பு
இந்தியா

மோடி- எலான் மஸ்க் சந்திப்பு?

டெஸ்லா தொழிற்சாலை திட்டம்: முக்கிய சந்திப்பு

Updated On : 10 ஏப்ரல், 2024 at 12:33 PM
கோப்புப் படம்
பகிர்:

டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் பிரதமர் நரேந்திர மோடியை ஏப்ரலில் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை தொடங்கவிருக்கும் திட்டம் குறித்த அறிவிப்பு இந்த சந்திப்பின்போது வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

புது தில்லியில் ஏப்ரல் 22-ல் இந்த சந்திப்பு நிகழலாம் எனவும் திட்டங்கள் மாறக்கூட நேரிடும் எனவும் தகவல்கள் வெளியாகின்றன.

இந்த சந்திப்பு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

முன்னதாக, இந்தியாவில் 2 பில்லியன் டாலர் முதலீட்டில் அமையவுள்ள தொழிற்சாலைக்கான இடத்தைக் காண டெஸ்லாவின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு இந்த மாதம் வரவிருப்பதாக ரைட்டஸ் தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →