சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகம் படம்: பல்கலைக்கழக வலைதளம்
இந்தியா

ஹிந்து மாணவிகளுடன் பேசிய முஸ்லிம் மாணவர் மீது தாக்குதல்

லவ் ஜிகாத் குற்றச்சாட்டை முன்வைத்து முஸ்லிம் மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

DIN

ஹிந்து மாணவிகளுடன் பேசியதற்காக முஸ்லிம் மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புணேவில் உள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் 19 வயதுடைய முஸ்லிம் மாணவர் ஒருவர், இரண்டு ஹிந்து மாணவிகளுடன் அமர்ந்து ஞாயிற்றுக்கிழமை பேசிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் மாணவர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில்,

“கடந்த ஞாயிற்றுக்கிழமை மதிய உணவுக்கு பிறகு இரண்டு மாணவிகளுடன் தாக்கப்பட்ட மாணவர் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது, இரு சக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத 5 நபர்கள் ஹிந்து மாணவிகளுடன் பேசி லவ் ஜிகாத் செய்கிறாயா எனக் கூறி தாக்கியதாக மாணவர் புகார் அளித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேளூரில் சுவாமி ஊர்வலத்தில் மோதல்: பொதுமக்கள் சாலை மறியல்!

அமெரிக்காவில் எரிபொருள் நிரப்ப ரூ.2.20 கோடி ரொக்கமாக கொடுத்தாரா புதின்? அவசியம் ஏன்?

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்குத் தடையில்லை! - உயர்நீதிமன்றம்

திடீரென வைரலான சோனியா பாடல்! என்ன காரணம்?

10-க்கும் மேற்பட்டோர் மயக்கம்! முன்கூட்டியே தொடங்கும் தவெக மாநாடு!

SCROLL FOR NEXT