இந்தியா

பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல்: 3 சிறுவர்கள் பலி!

பழங்குடியினரின் தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தின் வன்னா நகரில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.

DIN

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கண்ணிவெடி வெடித்ததில் சிறுவர்கள் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஈத் பண்டிகையின் மூன்றாவது நாளில் பழங்குடியினரின் தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தின் வன்னா நகரில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.

மண்டோகை பகுதியில் இரண்டு அணிகளுக்கிடையே கைப்பந்து போட்டியைக் காணச் சென்ற சிறுவர்களில் ஒருவர் கண்ணிவெடியை மிதித்தால் பெரும் வெடிப்பு ஏற்பட்டதாக மாவட்ட கால்வதுறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில் 3 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.

காயமடைந்த சிறுவர்களுக்கு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் தேரா இஸ்மாயில் கானில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவர்கள் மூவரும் உயிரிழந்தனர்.

அப்பகுதியில் கண்ணிவெடிகளைப் புதைத்தது யார் என்பது இதுவரை தெரியவில்லை. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT