இந்தியா

கர்ப்பிணி, முதியவர்களுக்கு பல்லக்கு சேவை வழங்கும் தேர்தல் ஆணையம்

இணையதள செய்திப்பிரிவு

டெஹ்ராடூன்: ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவுடன் மக்களவைத் தேர்தல் தொடங்கவிருக்கிறது. இதில் அதிகபட்ச வாக்குகள் பதிவாக வேண்டும் என்பதற்காக கர்ப்பிணி, முதியவர்களுக்கு பல்லக்கு சேவை வழங்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில், மலைப்பாங்கான இடங்களிலிருந்து கர்ப்பிணிகளும், முதியவர்களும் வந்து வாக்குச்சாவடியில் வாக்களிக்க சிரமம் ஏற்படும் என்பதால், அவர்களை தூக்கி வர சுகாதாரத் துறை சார்பில் பல்லக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

மாநில தலைமை தேர்தல் அதிகாரி பி.வி.ஆர்.சி புருஷோத்தமின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் இதுபற்றி கூறுகையில், ''மலைப்பாங்கான மற்றும் அணுக முடியாத பகுதிகளில், 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் கர்ப்பிணிகள் போன்றவர்களுக்கு தானாக முன்வந்து வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல விருப்பம் உள்ளவர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் முழு உதவியும் கிடைக்கும் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புருஷோத்தம், “சேவையைப் பெற தகுதியானவர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

மாநிலத்தின் தொலைதூர மலைப்பாங்கான பகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் பல்லக்கு சேவையை சீராகச் செயல்படுத்த சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை இழக்காமல் இருப்பதை இது உறுதி செய்யும்”என்றார்.

பொது சுகாதார இயக்குநர் டாக்டர் வினிதா ஷா கூறுகையில், “ஹரித்வார் மற்றும் உதம் சிங் நகர் மாவட்டங்களைத் தவிர பதினொரு மாவட்டங்களின் தலைமை மருத்துவ அதிகாரிகளிடம், போதுமான எண்ணிக்கையிலான பல்லக்குகளை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 85 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்த வாக்காளர்களுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

தகுதியான வாக்காளர்களுக்கு பல்லக்குகள் வழங்குவதற்கு வசதியாக அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு அனைத்து தலைமை மருத்துவ அதிகாரிகளுக்கும் பொது சுகாதார இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து 87 வயதாகும் முதியவர் ஒருவர் கூறுகையில், நடக்க முடியாத நிலையிலும் என்னால் வாக்களிக்க முடியும் என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்கிறார் தனது கையில் வாக்காளர் அடையாள அட்டையை வைத்துக்கொண்டு.

உத்தரகண்டியில் மொத்தம் 83.21 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 79,900 பேர் மாற்றுத்திறனாளிகள், 6500 பேர் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்கிறது தேர்தல் ஆணைய புள்ளிவிவரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT