இந்தியா

உ.பி.: பிரதமர் மோடி, இந்து கடவுள் குறித்து அவதூறு கருத்துப் பதிவிட்ட இளைஞர் கைது

DIN

உத்திரப் பிரதேசத்தில் பிரதமர் மோடி, இந்து கடவுள்களுக்கு எதிராக அவதூறு கருத்துப் பதிவிட்டதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சூர்யாவா காவல் நிலைய அதிகாரி கூறுகையில், சோனு குமார் என்பவர் தனது முகநூல் கணக்கில் பிப்ரவரி 26ஆம் தேதி பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக எக்ஸ் மூலம் நேற்று புகார் வந்தது.

இந்த புகாரைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட சைபர் க்ரைம் போலீசார் பாளை கிராமத்தைச் சேர்ந்த சோனு குமாரை கைது செய்தனர்.

மேலும் ஹனுமான் லங்காவை எரிக்கும் கார்ட்டூன் மற்றும் வில் மற்றும் அம்பு வைத்திருக்கும் விஷ்ணு கார்ட்டூன் ஆகியவையும் அதே கணக்கில் இருந்து வெளியிடப்பட்டது என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆக்கப்பூர்வமான கருத்து என்ற அடிப்படையில் ஆபாசம், அவதூறு ஆகியவற்றை பரப்பக்கூடாது என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை பலமுறை வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான்குனேரியில் 2 போ் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

பொத்தகாலன்விளை விலக்கில் வழிகாட்டிப் பலகை அமைக்க கோரிக்கை

வஉசி பூங்கா அருகே ஓடையில் கான்கிரீட் மூடி அமைக்க கோரிக்கை

மாட்டு வண்டி பந்தயத்துக்கு அனுமதி கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு

ராஜவல்லிபுரம் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

SCROLL FOR NEXT