தேர்தல் பொதுக்கூட்ட மேடையில் ஹிமந்த பிஸ்வ சர்மா  
இந்தியா

இசை, நடனத்துடன் தேர்தல் பிரசாரம் செய்த முதல்வர்!

மக்களவைத் தேர்தலையொட்டி அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பாடலுக்கு நடனமாடி வாக்கு சேகரித்தார்.

DIN

மக்களவைத் தேர்தலையொட்டி அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பாடலுக்கு நடனமாடி வாக்கு சேகரித்தார்.

அசாம் மாநிலத்தின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான பாடலுக்கு தொண்டர்களுடன் நடனமாடி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அசாம் மாநிலத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி தேர்தல் பிரசாரங்களில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அசாம் மாநிலம் சோனிட்பூர் மாவட்டத்திற்குட்பட்ட போர்சோலா தொகுதியில் வேட்பாளர் டோபோன் கோகாய்க்கு ஆதரவாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பிரசாரத்தில் ஈடுபட்டார். வழக்கமாக பாஜக தலைமை சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் பாடலுக்கு நடனமாடி வாக்கு சேகரிப்பது அசாமில் வழக்கம்.

ஆனால், இம்முறை மேடையில் அசாம் கலாசாரத்தை பறைசாற்றும் வகையிலான பாடல் ஒலிபரப்பப்பட்டது. இதற்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சேர்ந்து முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா நடனமாடி வாக்கு சேகரித்தார்.

அசாமில் மாநிலத்தில் பிஹு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஏப்ரல் மாதத்தில் ரங்கோலி பிஹு கொண்டாடப்படுகிறது. மூன்று நாள் கொண்டாடப்படும் இப்பண்டிகை, அசாம் மாத ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

இதனையொட்டி அசாம் பாரம்பரியத்தைக் குறிக்கும் வகையிலான பாடல், பாஜக பிரசாரத்தின்போது ஒலிபரப்பப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

9 மாநிலங்களுக்கு ரூ. 4,645.60 கோடி புனரமைப்புத் திட்ட நிதி - உயர்மட்டக் குழு ஒப்புதல்

கேரளம்: மீன்பிடி படகு மீது கப்பல் மோதியதால் பரபரப்பு

ராமர், பிரதமர் மோடி குறித்து அவதூறு விடியோ: உ.பி.யில் இளைஞர் கைது

இன்ஸ்டாகிராம் பதிவால் இளைஞர் சுட்டுக் கொலை!

திருவண்ணாமலையில் ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை: காவலர்கள் பணிநீக்கம்

SCROLL FOR NEXT