இந்தியா

ராஜஸ்தானில் கார்-லாரி மோதி தீப்பிடித்ததில் 7 பேர் பலி

DIN

ராஜஸ்தானில் லாரி மீது மோதி கார் தீப்பிடித்ததில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பலியானார்கள்.

உத்திரப் பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர்கள் சலாசர் பாலாஜி கோயிலில் இருந்து ஹிசார் நோக்கி இன்று காரில் திரும்பிக்கொண்டிருந்தனர்.

இவர்களுடைய கார் அர்ஷிவாத் புலியா அருகே, சென்றுகொண்டிருந்த லாரியின் பின்னால் மோதியது.

மோதிய வேகத்தில் கார் உடனே தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேர் பலியானார்கள்.

தீப்பற்றியதால் காரின் கதவுகளை திறக்க முடியாமல் அவர்கள் அனைவரும் உயிருடன் எரிந்தனர். மேலும் பலியானவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் அதிகாரி ராம்பிரதாப் பிஷ்னோய் தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT