முகப்பு
இந்தியா

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

Updated On : 19 ஏப்ரல், 2024 at 4:04 PM
dead
பகிர்:

ஆந்திரத்தில் ஒய்எஸ்ஆர்சிபி சட்டப் பேரவை வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியல் 9 வயது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், ராஜம் என்ற இடத்தில் வியாழக்கிழமை இரவு 8 மணியளவில், தின்பண்டங்கள் வாங்க வந்த 8 வயது சிறுவன் மீது ஒய்எஸ்ஆர்சிபி ராஜம் (தனி) தொகுதி சட்டப்பேரவை வேட்பாளர் டி ராஜேஷின் வாகனம் மோதியது. இந்த சம்பவத்தில் அந்த சிறுவன் பலியானான்.

இந்நிகழ்வின்போது வாகனத்தில் வேட்பாளர் இல்லை. பிரசாரம் முடிந்து வாகனத்தின் டயர்களில் காற்று அடிப்பதற்காக ஓட்டுநர் எடுத்துச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. விபத்தைத்தொடர்ந்து வாகன ஓட்டுநர் எம்.சுதீரை (21) காவல்துறையினர் கைது செய்னர்.

Advertisement

சிறுவனின் உடல் உடற்கூராய்வுக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த பிரசார பலகை ஒன்று சிறுவனை பலமாக தாக்கியதால் சிறுவன் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.