மகாராஷ்டிர மாநிலம் புல்தானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா பேசியதாவது, ”நம்மை இரு நூற்றாண்டுகளாக ஆண்ட பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இப்போது உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது. மோடி ஜியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையால் மட்டுமே இது சாத்தியமாகியுள்ளது.
பிரதமர் மோடி ஜியை மீண்டும் பிரதமராக்க வேண்டுமென்று உங்கள் அனைவரையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். மோடி ஜியை தேர்ந்தெடுங்கள், அதன்மூலம், 2027-ஆம் ஆண்டுக்குள் உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக இந்தியா பிரகாசிப்பதை பாருங்கள்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.