முகப்பு
இந்தியா

மணிப்பூா் பாலத்தில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு

இமணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் முக்கியமான பாலமொன்றில் புதன்கிழமை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பாலத்தின் நடுப்பகுதியில் மூன்று பள்ளங்கள் விழுந்தன.

Updated On : 24 ஏப்ரல், 2024 at 8:19 PM
பகிர்:

இமணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் முக்கியமான பாலமொன்றில் புதன்கிழமை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பாலத்தின் நடுப்பகுதியில் மூன்று பள்ளங்கள் விழுந்தன.

தலைநகா் இம்பால் மற்றும் மாநிலத்தின் இதர பகுதிகளை நாகாலாந்துடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை என்ஹெச் 2-இல் அமைந்துள்ள இப்பாலத்தில் புதன்கிழமை அதிகாலையில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பை அடையாளம் தெரியாத நபா்கள் நடத்தியுள்ளனா். இச்சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

பாலத்தின் நடுப்பகுதியில் மூன்று பள்ளங்கள் விழுந்துள்ளதால், கனரக வாகனங்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இலகுரக பயணிகள் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

Advertisement

இக்குண்டுவெடிப்பு காரணமாக, தலைநகா் இம்பாலுக்கு அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் 150 லாரிகள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. குண்டுவெடிப்பு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் ஏற்பட்டது. அதன்பிறகு, இரு சமூகத்தினரும் அவ்வப்போது மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனா். வன்முறையில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.

மேற்கு இம்பால் மாவட்டத்தில் இரு சமூக குழுக்கள் இடையே செவ்வாய்க்கிழமை கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்த சில மணிநேரங்களில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments