இந்தியா

கோட்டக் மஹிந்திரா வங்கியின் முக்கிய சேவைகளுக்கு ஆர்பிஐ தடை!

ஆன்லைனில் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், புதிய கிரெடிட் கார்டுகள் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

DIN

கோட்டக் மஹிந்திரா வங்கியின் சில சேவைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை தடை விதித்துள்ளது.

நாட்டின் 5-வது பெரிய தனியார் வங்கியாக செயல்பட்டு வருகிறது கோட்டக் மஹிந்திரா வங்கி.

இந்த வங்கியின் இணைய சேவை பாதுகாப்பு குறித்து நடந்திய ஆய்வில் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் ரிசர்வ் வங்கியின் விதிகளை கடைபிடிக்க தவறியதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோட்டக் மஹிந்திரா வங்கியின் இணையதளம் மற்றும் மொபைல் பேங்கிங் வாயிலாக புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கும் தடை விதித்து, அந்த சேவைகளை உடனடியாக நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும், மறுஉத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

எனினும், பிற சேவைகள் தடையின்றி தொடர்ந்து செயல்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரன் பதிப்பகம்

மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு

அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோரின் நியமனக் கடிதத்தை ஏற்றாா் குடியரசுத் தலைவா்

எழுத்துன்னா... இப்படித்தான் இருக்கணும்!

வாசிக்க வாங்கியவை!

SCROLL FOR NEXT