பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து
பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து நேரிட்டதில் ஒரு சிலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்!
பிகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள கட்டடத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது. இந்த கட்டத்துக்குள் ஒரு சிலர் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கட்டடத்துக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
கட்டடத்தில் தீ பற்றியது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.பாட்னா ரயில் நிலையம் அரகே அமைந்துள்ள உணவு விடுதியில் இந்த விபத்து நேரிட்டதாகவும், கட்டடத்துக்குள் இருந்து ஒரு சிலர் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.