முகப்பு
இந்தியா

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

Updated On : 26 ஏப்ரல், 2024 at 5:31 PM
பகிர்:

மேகாலய துணை முதல்வா் ஸ்னியாவ்பாலாங் தாா் வீட்டில் மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை பெட்ரோல் குண்டுகளை வீசீனா்.

இதுதொடா்பாக அம்மாநில காவல்துறையினா் கூறியதாவது: மேகாலய மாநிலம் கிழக்கு காசி மலை மாவட்டத்தின் நோங்மிங்சோங் பகுதியில் உள்ள துணை முதல்வா் ஸ்னியாவ்பாலாங் தாா் வீட்டின் வெளிப்பகுதியில் மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனா். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுதொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனா்.

பெட்ரோல் குண்டு வீச்சு தொடா்பாக தாா் புகாரளித்த நிலையில் அவரின் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments