FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

2-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் பதிவாகிய 11 மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது.

Updated On : 26 ஏப்ரல் 2024, 12:59 pm IST
- ANI
பகிர்:

மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தமிழகம் (39), புதுச்சேரி (1) உள்பட 21 மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களில் அடங்கிய 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

இரண்டாம் கட்டமாக கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களிலும், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்திலும் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், கா்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

ராஜஸ்தானில் 13, மகாராஷ்டிரம், உத்தர பிரதேசத்தில் தலா 8, மத்திய பிரதேசத்தில் 6, அஸ்ஸாம், பிகாரில் தலா 5, சத்தீஸ்கர், மேற்கு வங்கத்தில் தலா 3, மணிப்பூர், திரிபுரா, ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

11 மணி நிலவரம்:

அசாம் 27.43%

பிகார் 21.68%

சத்தீஸ்கர் 35.47%

ஜம்மு-காஷ்மீர் 26.61%

கர்நாடகம் 22.34%

கேரம் 25.61%

மத்திய பிரதேசம் 28.15%

மகாராஷ்டிரம் 18.83%

மணிப்பூர் 33.22%

ராஜஸ்தான் 26.84%

திரிபுரா 36.42%

உத்தர பிரதேசம் 24.31%

மேற்கு வங்கம் 31.25%

2-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி, குறைந்தபட்சமாக மகாராஷ்டிரத்தில் 18.83% வாக்குகளும், அதிகபட்சமாக திரிபுராவில் 36.42% வாக்குகள் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments