இந்தியா

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

DIN

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

அரவிந்த் சிங் தனது ராஜிநாமா கடிதத்தில், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்கும் காங்கிரஸின் முடிவில் தனக்கு விருப்பம் இல்லாத காரணத்தால் காங்கிரஸில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தில்லி மாநகராட்சிச் தேர்தலின்போது அஜய் மாக்கனுடன், அர்விந்தர் சிங் லவ்லிக்கு முரண்பாடு எழுந்த நிலையில் அவர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் சேர்ந்த லவ்லி, சில மாதங்களில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் தில்லி பிரிவு தலைவராக அரவிந்தர் சிங் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், ”காங்கிரஸ் கட்சியின் மீது தவறான தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸின் முடிவில் தனக்கு விருப்பம் இல்லை. எனவே, காங்கிரஸில் இருந்து விலகுகிறேன்” என காங்கிரஸில் இருந்து விலகிய அரவிந்த் சிங் லவ்லி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT