முகப்பு
இந்தியா

வயநாடு நிலச்சரிவு: கேரளத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் தொடங்கியது!

கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீஷன் பங்கேற்றுள்ளார்.

Updated On : 1 ஆகஸ்ட், 2024 at 12:12 PM
வயநாடு நிலச்சரிவு - din
பகிர்:

வயநாடு நிலச்சரிவு தொடர்பாக ஆலோசிக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.

வயநாட்டில் நடைபெறும் ஆலோசனையில் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீஷன், அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னதாக, ஹெலிகாப்டர் மூலம் வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு செய்தார்.

Advertisement

இந்த கூட்டத்தில், மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள், மத்திய அரசிடம் வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

வயநாடு மாவட்டம், மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை மண்ணுக்குள் புதைந்தனர்.

இதுவரை 280-க்கும் அதிகமான சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல போன 200-க்கும் அதிகமானோரை தேடும் பணிகள் தொடர்ந்து வருகின்றது.

இந்த நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை முதல்வர் பினராயில் விஜயன், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இன்னும் சற்று நேரத்தில் பார்வையிடவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.