வயநாடு நிலச்சரிவு: மேப்பாடி மருத்துவமனையில் ராகுல்
வயநாடு நிலச்சரிவில் சிக்கி மேப்பாடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் ராகுல்
வயநாடு: கேரள மாநில வயநாடு மாவட்டத்தில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க இன்று கேரளம் வந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மேப்பாடி மருத்துவமனைக்கு வந்தார்.
வயநாட்டில் உள்ள மேப்பாடி மருத்துவமனைக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவுடன் வந்திருக்கும் ராகுல் காந்தி, நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கேரளத்தின் வயநாட்டில் மேப்பாடி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருவோரின் தேவை என்ன, எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் என்ன என்பதை மக்களிடம் கேட்டறிந்தார் ராகுல்.
Advertisement