மின்னல் பாய்ந்து 15 பேர் பலி 
இந்தியா

பிகாரில் மின்னல் பாய்ந்து 15 பேர் பலி; கனமழை எச்சரிக்கை!

பிகாரில் பல்வேறு இடங்களில் மின்னல் பாய்ந்து 15 பேர் பலி; கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DIN

பாட்னா: பிகார் மாநிலத்தில், கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கி குறைந்தது 15 பேர் பலியானதாக மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாட்னா மற்றும் வைஷாலி மாவட்டங்களில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், ஔரங்காபாத், ஜெஹனாபாத், சரண், ரோஹ்தஸ், நளந்தா மற்றும் ஜமூய் மாவட்டங்களில் மின்னல் பாய்ந்து மரணங்கள் பதிவாகியிருப்பதாகவும், ஔரங்காபாத்தில்தான் மின்னல் பாய்ந்து அதிகபட்சமாக 3 பெண்கள் உள்பட நான்கு பேர் பலியானதாகவும் கூறப்படுகிறது.

ஜெஹனாபாத்தில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த மூன்று பேர் பலியாகியிருக்கிறார்கள்.

மின்னல் பாய்ந்த பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.

மழைக்காலத்தின்போது, மாநில மேலாண்மை துறை விடுக்கும் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்றுமாறும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மின்னல் பாய்ந்த மரணங்களில் 16 மற்றும் 14 வயது சிறார்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT