மகாகாளேஷ்வர் கோயிலில் கூடிய பக்தர்கள் -
இந்தியா

ஆடி மாத சிவராத்திரி: மகாகாளேஷ்வர் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்!

சவான் மாதத்தில் வரும் சிவராத்திரியானது வருடாந்திர சிவராத்திரிக்குச் சமமானதாகும்.

ANI

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் உள்ள மகாகாளேஷ்வர் கோயிலில் ஆடி மாத சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டு பிரார்த்தனை செய்து மகிழ்ந்தனர்.

வட மாநிலங்களில் சாவன் மாதம் என்றழைக்கப்படும் ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு திங்கள்கிழமையும், சிவராத்திரியும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அந்தந்த மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளிலும், கங்கையிலும் புனித நீர் எடுத்து சிவ பக்தர்கள் நடந்தே சென்று அவரவர் பகுதியில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்து மகிழ்கின்றனர்.

இந்த நிலையில் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற மகாகாளேஸ்வர் கோயிலில் பக்தர்கள் அலைகடலெனத் திரண்டுள்ளனர். சாவன் மாதம் முழுவதும் மங்களகரமான மாதம் என்றாலும் வெள்ளிக்கிழமையில் சிவராத்திரி வந்துள்ளதால் பக்தர்களிடையே மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது.

தொலைதூரங்களில் இருந்தும் சிவபக்தர்கள் பாபா மகாகாளேஷ்வரருக்கு புனித நீர் சமர்ப்பித்து வருகின்றனர்.

இதையடுத்து கோயிலின் அர்ச்சகர் மகேஷ் சர்மா கூறுகையில்,

சாவன் மாதம் சிவபெருமானின் மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் சிவனை வழிபடும் பக்தர்கள் சிவனின் ஆசீர்வாதங்களைப் பெறுவதாகக் கருதுகின்றனர். சவான் மாதத்தில் வரும் சிவராத்திரியானது வருடாந்திர சிவராத்திரிக்குச் சமமானதாகும்.

சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமானுக்கு எள் பிரசாதம் கொடுப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. சிவனுக்கு எள்ளை சமர்ப்பணம் செய்பவர்களுக்குப் பணத் தட்டுப்பாடு ஏற்படாது என்பது நம்பிக்கை. மேலும் சிவனுக்கு எள் அர்ச்சனையும் செய்வது மிகவும் முக்கியத்துவமாகக் கருதப்படுகிறது என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

SCROLL FOR NEXT