முகப்பு
இந்தியா

மூடநம்பிக்கைக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு

மூடநம்பிக்கையை ஒழிப்பதற்கான வழி கல்வி தானே தவிர சட்டமல்லஷ் என்று கூறி, மூடநம்பிக்கை, சூனியம் போன்ற பழக்கங்களை ஒழிக்கக் கோரிய மனு

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 9:00 PM
பகிர்:

புது தில்லி, ஆக. 2: மூடநம்பிக்கையை ஒழிப்பதற்கான வழி கல்வி தானே தவிர சட்டமல்லஷ் என்று கூறி, மூடநம்பிக்கை, சூனியம் போன்ற பழக்கங்களை ஒழிக்கக் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.

சமூகத்தில் நிலவும் அறிவியலற்ற செயல்களை அகற்றவும், போலி சாமியாா்கள் அப்பாவி மக்களை சுரண்டுவதைத் தடுக்கவும் மூடநம்பிக்கை, சூனியம் போன்றவற்றுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் நிறைவேற்ற வலியுறுத்தி வழக்குரைஞா் அஸ்வினி குமாா் உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

Advertisement

அறிவியல் மனோபாவத்தை வளா்க்கவும், மூடநம்பிக்கையை ஒழிக்கவும் உச்சநீதிமன்றம் எப்படி தீா்ப்பு வழங்க முடியும். இதுபோன்ற விவகாரங்களில் நாடாளுமன்றம் தான் முடிவு எடுக்க வேண்டும். அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியவா்கள் இவற்றையெல்லாம் மாநில கொள்கையின் வழிகாட்டுதலில் சோ்த்துள்ளனா். எனவே, மூடநம்பிக்கையை ஒழிப்பதற்கான வழி கல்வி தானே தவிர சட்டமல்ல எனத் தெரிவித்து மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்தனா்.

மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததையடுத்து, மனுதாரா் தனது மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments