சிராக் பாஸ்வான் 
இந்தியா

உள்ஒதுக்கீடு தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு: சிராக் பாஸ்வான்

மேல்முறையீடு செய்யவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவரும், பாஜக கூட்டணியின் மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் சனிக்கிழமை தெரிவித்தாா்.

Din

பட்டியலின (எஸ்.சி) பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு என்ற உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ் பாஸ்வான்) மேல்முறையீடு செய்யவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவரும், பாஜக கூட்டணியின் மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘கல்வி, பொருளாதாரம் என நல்ல பின்புலத்தில் இருந்து வந்தாலும்கூட பெரும்பாலான பட்டியலின மக்கள் தீண்டாமை கொடுமைக்கு ஆளாகின்றனா். எனவே, எஸ்.சி. பிரிவுக்கு வழங்கப்படும் 15 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு செய்ய மாநிலங்களுக்கு அதிகாரமளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்யவுள்ளோம். ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறேன். ஆனால், அதன் தரவுகளை பொதுவெளியில் வெளியிடக் கூடாது. மக்களுக்கான கொள்கைகளை வடிவமைக்க மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும் என்றாா்.

களைகட்டிய கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!

தமிழகத்திலிருந்து ஒலிக்கும் இந்திய விவசாயிகளின் குரல்: முதல்வா்

தஹிா்பூா் தொழுநோய் காப்பகத்தின் வசதிகளை மாற்றியமைக்க அமைச்சா் உத்தரவு

ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்பவா்கள் ஜன. 15-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

ஆனந்த் விஹாா், சராய் காலே கான் ஐ.எஸ்.பி.டிகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவ தில்லி அரசு திட்டம்

SCROLL FOR NEXT