மகளை விவாகரத்து செய்யவுள்ள மருமகனை நீதிமன்றத்தில் சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற காவலர்
மருமகனை நீதிமன்றத்தில் சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற காவல்துறை உயரதிகாரி
ஓய்வுபெற்ற காவல்துறை உயரதிகாரி ஒருவர், நீதிமன்ற வளாகத்தில் தனது மருமகனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர் மாவட்ட நீதிமன்றத்தில் தனது மகளின் விவாகரத்து தொடர்பான வழக்கு விசாரணைக்கு சென்றிருந்தபோது, ஓய்வுபெற்ற காவலர் மால்விந்தர் சிங் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்த தனது மருமகன் ஹர்ப்ரீத் சிங்கை சுட்டுள்ளார். அதில் பலத்த காயமடைந்த ஹர்ப்ரீத் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இன்று(ஆக. 3) பகல் 2 மணியளவில் நீதிமன்றத்தில் அமைந்துள்ள தியான மண்டபத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, கொலை செய்த மால்விந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ள காவல்துறை அதிகரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.