முகப்பு
இந்தியா

வயநாடு நிலச்சரிவு: தவறான செய்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை!

வயநாடு நிலச்சரிவு தொடர்பாக தவறான செய்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 8:48 PM
கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் - கோப்புப் படம்
பகிர்:

வயநாடு நிலச்சரிவு தொடர்பாக தவறான செய்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இன்று (ஆக. 4) எச்சரித்தார்.

இது தொடர்பாக பேசிய அவர், நிலச்சரிவில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை வளர்ப்பது தொடர்பாக தவறான தகவல் பரவி வருகிறது.

குழந்தைகளை வளர்க்க விண்ணப்பம் பெற்று குழந்தைகளை வழங்குவதாக வரும் செய்திகள் முற்றிலும் தவறானது.

Advertisement

சமூக வலைதளங்களில் தவறான பிரசாரம் செய்து வருபவர்கள், பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தவறான செய்தியை பரப்புபவர்களின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.