ஜம்மு - காஷ்மீரில் வானிலை மோசமாக இருப்பதால் அமர்நாத் யாத்திரைக்கு இன்று புறப்பட வேண்டிய பக்தர்கள் குழு முகாமில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.
வானிலை இயல்பு நிலைக்குத் திரும்பியதும் நாளை யாத்திரையைத் தொடங்கலாம் என்று கூறப்பட்டதாகவும், முகாமில் தங்கவைக்கப்பட்ட மக்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்பட்டதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, நேற்று (ஆகஸ்ட் 4) ஸ்ரீநகர் முகாமில் இருந்து பெஹல்காம் நோக்கி பயணத்தைத் தொடங்கிய பக்தர்கள் குழு வானிலை மோசமானதாக இருந்த போதிலும் யாத்திரை சென்றதாகவும், அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீ அமர்நாத்ஜி ஆலய வாரியத்தால் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. இரண்டு வழிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த யாத்திரையில், ஒன்று பெஹல்காம் வழியாகவும், மற்றொன்று காஷ்மீரின் கந்தர்பால் மாவட்ட பல்தால் வழியாகவும் நடைபெறுகிறது. பல்தால் பகுதி பக்தர்களுக்கான முகாமாக விளங்குகிரது.
அமர்நாத் யாத்திரை கடந்த ஜூன் 29 அன்று பல்தால் மற்றும் பெஹல்காம் முகாமில் இருந்து தொடங்கியது. வருகிற ஆகஸ்ட் 19 உடன் நிறைவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.