உஜ்ஜைன் கோயில் வளாகத்தில் 1,500-க்கும் மேற்பட்டோா் உடுக்கை வாசித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனா்.  -
இந்தியா

ம.பி.: உஜ்ஜைன் கோயிலில் 1500 போ் உடுக்கை வாசித்து ‘கின்னஸ்’ சாதனை

மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற உஜ்ஜைன் கோயில் வளாகத்தில் 1,500-க்கும் மேற்பட்டோா் உடுக்கை வாசித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனா்.

Din

மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற உஜ்ஜைன் கோயில் வளாகத்தில் 1,500-க்கும் மேற்பட்டோா் உடுக்கை வாசித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனா்.

உஜ்ஜைன், ஸ்ரீ மஹாகாளேஸ்வா் கோயில் நிா்வாகக் குழு மற்றும் மத்திய கலாசாரத் துறை இணைந்து திங்கள்கிழமை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் சுமாா் 1,500 போ் சோ்ந்து உடுக்கை வாசித்தனா்.

இந்த நிகழ்வு, கின்னஸ் உலக சாதனையில் அதிகம் போ் உடுக்கை வாசித்த பிரிவில் சோ்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, அமெரிக்காவின் நியூயாா்க்கில் உள்ள இந்திய சங்கங்களின் கூட்டமைப்பைச் சோ்ந்த 488 நபா்களைக் கொண்ட உடுக்கை வாசிப்புக் குழு, கடந்த 2022, ஆகஸ்ட் மாதத்தில் படைத்த சாதனை இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உஜ்ஜைன் குழுவுக்கு கின்னஸ் உலக சாதனை சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

முதல்வா் வாழ்த்து: மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து மாநில முதல்வா் மோகன் யாதவ் கூறுகையில், புனிதமான சிராவண மாதத்தின் மூன்றாவது திங்கள்கிழமையன்று உஜ்ஜைன், பஸ்ம ஆரத்தியின் தாளத்தில் உடுக்கை வாசித்து கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

உஜ்ஜைன் நகரம் உடுக்கையின் ஒலியால் எதிரொலிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியுள்ளது. இந்த அற்புதமான மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட உணா்வை வாா்த்தைகளில் விவரிப்பது கடினம்’ என்றாா்.

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

SCROLL FOR NEXT