தெற்கு பசிபிக் தீவு நாடான ஃபிஜிக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் முர்முவுக்கு அந்த நாட்டின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திரௌபதி முர்முவின் மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணம் நேற்று தொடங்கியது. இதன்படி பிஜி நாட்டுக்கு இன்று அவர் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த பயணத்தின் முக்கியத்துவமான பிஜி நாட்டு அதிபர் கட்டோனிவேர் மற்றும் பிரதமர் சிதிவேனி ரபுகாவை சந்தித்து இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார்.
பிஜி நாட்டில் இன்றும் நாளையும் தங்கியிருக்கும் அவர், இந்தப் பயணத்தைத் தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் திமோர்-லெஸ்டே ஆகிய நாடுகளுக்குச் செல்ல உள்ளார்.
இந்தியாவிலிருந்து பிஜி தீவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முர்முவால் இரு நாடுகளுக்கும் இடையேயான வரலாற்று உறவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
மேலும், அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் முர்மு உரையாற்ற உள்ளார். அதேசமயம் புலம்பெயர்ந்த இந்தியர்களுடனும் உரையாடத் திட்டமிட்டுள்ளார்.
நியூசிலாந்தின் கவர்னர் ஜெனரல் சிண்டி கிரோவின் அழைப்பின் பேரில் குடியரசுத் தலைவர் தனது பயணத்தின் இரண்டாவது கட்டமாக ஆகஸ்ட் 7 முதல் 9 வரை நீயுசிலாந்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அரசுமுறை பயணத்தின்போது கிரோவுடன் இருதரப்பு சந்திப்பை நடத்துவார் மற்றும் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனைச் சந்திக்கின்றார். அங்கு முர்மு கல்வி மாநாட்டில் உரையாற்றுகிறார். இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களைச் சந்தித்துப் பேசுவார்.
அவரது சுற்றுப்பயணத்தின் கடைசியாக குடியரசுத் தலைவர் முர்மு திமோர் லெஸ்தேவுக்குச் செல்வார், இந்தியாவிலிருந்து திமோர் லெஸ்தேவுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் குடியரசுத் தலைவர் இவராவர். மோர் லெஸ்டே பிரதமர் சனானா குஸ்மாவோவையும் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.