ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் திங்கள்கிழமை நேரிட்ட விபத்தில் டிப்பர் லாரி வருவாய்த்துறை அதிகாரிகளின் காரில் மோதியதில் 3 அரசு ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஷிவ்சிங்புரா கிராமத்திற்கு அருகே கார் மீது டிப்பர் லாரி மோதியது. இதனால், நிலைகுலைந்த கார் வயல்வெளியில் விழுந்ததாக லால்சோட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மஹாவீர் சிங் தெரிவித்தார்.
இந்த விபத்தில் கார் பயணிகளான வருவாய்த்துறை அதிகாரிகள் தாசில்தார் கிரிராஜ் சர்மா, கிராம கணக்காளர்களான தினேஷ் ஷர்மா, மற்றொரு தினேஷ் சர்மா ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், 3 கிராம கணக்காளர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில், இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். மேலும், ஒருவர் சிகிச்சைக்காக ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறினார்.
காரில் பயணம் செய்த வருவாய்த்துறை ஊழியர்கள் அனைவரும் ஏதோ ஒரு வேலையாக ராஜ்புரா கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர். விபத்து நடந்ததும் டிப்பர் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.