முகப்பு
இந்தியா

வயநாடு நிலச்சரிவு: உரிமையாளரைக் கண்டறிந்த வளர்ப்பு நாய்!

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 7 நாள்களுக்குப் பிறகு, வளர்ப்பு நாய் தனது உரிமையாளரைக் கண்டறிந்து அவரிடம் சேர்ந்துள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட், 2024 at 6:50 PM
பகிர்:

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 7 நாள்களுக்குப் பிறகு, வளர்ப்பு நாய் தனது உரிமையாளரைக் கண்டறிந்து அவரிடம் சேர்ந்துள்ளது.

வளர்ப்பு நாயைக் கண்ட உரிமையாளர், நாயை ஆரத்தழுவி தனது கண்ணீர் மூலம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மலைக்கிராமங்களில் கடந்த ஜூலை 30ஆம் தேதி அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டக்கை, சூரமாலா, அட்டமாலா, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்த வீடுகள் சேதமடைந்தன. பலர் மண்ணுக்குள் புதையுண்டனர்.

Advertisement

அவர்களைத் தேடும் பணியில் ராணுவம் உள்ளிட்ட மத்திய படைகளுடம் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து 7வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 386 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 273 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 180 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிலச்சரிவில் உரிமையாளரை இழந்த நாய் ஒன்று, 7 நாள்களுக்குப் பிறகு தனது உரிமையாளரைக் கண்டறிந்துள்ளது.

இதனை அங்கிருந்த ஒருவர் விடியோ எடுத்து எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் ஆகாரமின்றி மிகவும் நலிவடைந்த நாய் ஒன்று, வெள்ளம், இடிபாடுகளுக்கு மத்தியில் தனது உரிமையாளரைத் தேடித்திரிந்துள்ளது. 7 நாள்களுக்குப் பிறகு இன்று தனது உரிமையாளரை அந்த நாய் அடையாளம் கண்டுள்ளது. இடிபாடுகளில் குடும்ப உறவுகளை, உடமைகளை இழந்த உரிமையாளர், தான் வளர்த்த நாயைக் கண்டதும் மகிழ்ச்சியில் ஆரத்தழுவி கண்ணீர் வடித்தார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.