டாக்காவிற்கு விமான சேவை ரத்து 
இந்தியா

வங்கதேச வன்முறை: இந்தியா-டாக்காவிற்கு விமான சேவை ரத்து!

ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி பின்பும் போராட்டங்களும், வன்முறைகளும் தொடர்ந்து வருகின்றது.

PTI

வங்கதேசத்தில் நிலவி வரும் பிரச்னையின் எதிரொலியாக தலைநகரில் இருந்து டாக்காவிற்கு விமான சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

அண்டை நாடான வங்கதேசத்தில், இட ஒதுக்கீடு விவகாரத்தில் போராட்டம் வெடித்து வருகின்றது. இந்த போராட்டம் வன்முறையாக மாறியுள்ள நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகினார். தற்போது நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதையடுத்து வங்கதேசத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகின்றது.

ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி பின்பும் போராட்டங்களும், வன்முறைகளும் தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில் தில்லியிலிருந்து டாக்காவிற்கு விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

இண்டிகோ மற்றும் விஸ்தாரா ஆகிய நிறுவனங்கள் வங்கதேச தலைநகருக்கான அனைத்து விமானங்களையும் இன்று ரத்து செய்துள்ளன. அதேபோல ஏர் இந்தியா நிறுவனமும் டாக்காவிற்குச் செல்லவிருந்த விமானங்களை ரத்து செய்துள்ளனர்.

அட்டவணையின்படி, விஸ்தாரா மும்பையிலிருந்து தினசரி விமானங்களையும், தில்லியிலிருந்து டாக்காவிற்கு வாராந்திர மூன்று சேவைகளையும் இயக்குகிறது. அதேபோல் ஏர் இந்தியா விமான நிறுவனம் தில்லியிலிருந்து டாக்காவிற்கு தினசரி 2 விமானங்களை இயக்குகிறது.

வங்கதேசத்தில் நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, டாக்காவிற்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT