ஒருநாள் இடைவெளிக்குப் பின் அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடக்கம்!
அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு தினத்தையொட்டி, அமா்நாத் யாத்திரை ஒருநாள் நிறுத்திவைக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில் அமா்நாத் யாத்திரை திங்கள்கிழமை (ஆக.5) நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று(ஆக. 6) யாத்ரீகர்கள் மீண்டும் அமர்நாத் குகை பனி லிங்கத்தை தரிசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு தினத்தையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக அமா்நாத் யாத்திரை ஒருநாள் நிறுத்திவைக்கப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால் அடிவார முகாம்களில் இருந்து யாத்ரீகா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
நடப்பாண்டில் இதுவரை 4.90 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் அமா்நாத் கோயிலில் தரிசனம் செய்துள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.