அமர்நாத் யாத்திரை 
இந்தியா

அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது: இதுவரை 5 லட்சம் பேர் தரிசனம்!

தெற்கு காஷ்மீரின் நுன்வான்(பஹல்காம்) அடிப்படை முகாமிலிருந்து பக்தர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ANI

வருடாந்திர அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தத்திற்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்தாண்டு அமர்நாத் யாத்திரை ஜூன் 29ம் தேதி தொடங்கிய நாள் முதல் சுமார் 5 லட்சம் பக்தர்கள் புனித குகைக் கோயிலைத் தரிசனம் செய்துள்ளதாக ஸ்ரீ அமர்நாத்ஜி ஆலய வாரியத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமர்நாத் யாத்திரை ஒருநாள் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. ஜம்முவிலிருந்து 1,873 பக்தர்கள் அடங்கிய மற்றொரு குழு வடக்கு காஷ்மீரிலிருந்து புறப்பட்டது.

தெற்கு காஷ்மீரின் நுன்வான்(பஹல்காம்) அடிப்படை முகாமிலிருந்து பக்தர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஜம்முவில் உள்ள பகவதி நகர் யாத்ரி நிவாஸில் இருந்து 1,873 பக்தர்களுடன் 69 வாகனங்கள் ஜம்முவில் இருந்து வடக்கு காஷ்மீரின் பால்டால் அடிப்படை முகாமிலிருந்து அதிகாலை 3.25 மணிக்குப் புறப்பட்டது.

சாரி முபாரக் சுவாமி பஹல்காம் வழியாகக் குகைக் கோயிலுக்குச் செல்லவுள்ளார். மேலும் ஆகஸ்ட் 14 வரை பஹல்காமில் இருக்கும் குகைக் கோயிலுக்குச் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பஹல்காம் பாதை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, அமர்நாத் பக்தர்கள் செல்லும் வழி நெடுகிலும் ஏராளமான பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT