முகப்பு
இந்தியா

இலவசமாக விசா வேண்டுமா?

நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால் இலவச விசா வழங்குவதாக அமெரிக்க விசா நிறுவனம் அறிவிப்பு

Updated On : 6 ஆகஸ்ட், 2024 at 6:14 AM
பகிர்:

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால், அனைவருக்கும் இலவச விசா அமெரிக்க விசா விண்ணப்ப தளமான அட்லிஸ் அறிவித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில், ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரரான நீரஜ் சோப்ரா பங்கேற்கவுள்ளார்.

இந்த நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றால், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இலவச விசா வழங்கப்படும் என்று அட்லிஸ் விசா விண்ணப்ப தளத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இந்திய வம்சாவளி மொஹக் நஹ்தா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மொஹக் நஹ்தா, தனது லிங்க்ட் இன் பக்கத்தில் ``நீரஜ் சோப்ரா வருகிற ஆக. 8ஆம் தேதியில் நடைபெறுகிற பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வென்றால், அட்லிஸில் விசா விண்ணப்பிக்கும் அனைத்து பயனர்களுக்கும் ஒரு நாள் முழுவதும் இலவச விசாவை வழங்குவோம்.

இந்த சலுகையின்கீழ், நீங்கள் செல்ல விரும்பும் எந்த நாட்டையும் தேர்வு செய்யலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை மட்டும் தெரிவியுங்கள்; நாங்கள் உங்களுக்காக இலவச விசா கிரெடிட் மூலம் ஒரு கணக்கை உருவாக்கி விடுவோம்’’ என்று கூறியுள்ளார்.

நீரஜ் சோப்ரா ஆக. 6, செவ்வாய்கிழமை, கிஷோர் ஜெனாவுடன் தகுதிச் சுற்றில் போட்டியிடுகிறார். நீரஜ் சோப்ரா தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றால், ஆக. 8-ல் பதக்கத்திற்காக போட்டியிடுவார்.

சா்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரீஸ் நகரில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →