முகப்பு
இந்தியா

வங்கதேசம் போன்று இந்தியாவிலும் வன்முறை: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்

வங்கதேசத்தைப்போல இந்தியாவிலும் வன்முறை வெடிக்கலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்த கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 11:03 PM
பகிர்:

வங்கதேசத்தைப்போல இந்தியாவிலும் வன்முறை வெடிக்கலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்த கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பேசுகையில், "அனைத்தும் இயல்பாக இருப்பதுபோல தோன்றும். ஆனால் வங்கதேசத்தில் என்ன நிகழ்கிறதோ அது இந்தியாவிலும் நிகழலாம்' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், "நாட்டில் ஜனநாயகமும், நேர்மையான தேர்தலும் அவசியம் என்பதை வங்கதேசம் நமக்குக் கற்றுத் தருகிறது' என்று கூறியிருந்தார். இரு காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்த இக்கருத்துக்கு பாஜக புதன்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாஜக எம்.பி. ராஜீவ் பிரதாப் ரூடி கூறியதாவது: காங்கிரஸ் உறுப்பினராக சல்மான் குர்ஷித் உள்ளார். எனினும், இது வன்முறையாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையாகவே தெரிகிறது. இது தேசத் துரோகம். தேர்தல் தோல்வியை மறைப்பதற்காக காங்கிரஸ் துரதிருஷ்டவசமாக இதுபோன்ற வன்முறையாளர்களின் அறிக்கையை ஊக்குவிக்கிறது என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →