முகப்பு
தமிழ்நாடு

அம்மா வேண்டாம், அக்கா என்றால் போதும்: தமிழிசை கலகலப்பு!

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தது தொடர்பாக...

Updated On : 18 பிப்ரவரி 2026, 5:55 pm IST
தமிழிசை செளந்தரராஜன் - கோப்புப் படம்
பகிர்:

என்னை அம்மா என்று அழைக்க வேண்டாம்; அக்கா என்று அழைத்தால் போதும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விவசாயிகளின் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

பாஜக முன்னாள் மாநில தலைவரும் - தேர்தல் அறிக்கை குழுத் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற, இந்தக் கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

Advertisement

Advertisement

இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ”தமிழக அரசு பாஸ் மார்க் வாங்கி இருக்கிறது என்றால், அது டாஸ்மாக்கில் மட்டும்தான், வேறு எதிலும் பாஸ் மார்க் வாங்கவில்லை.

ஒரு கோரிக்கை, அம்மா வந்துட்டாங்க, அம்மா வந்துட்டாங்க என்று தெரிவித்தார்கள். தமிழ்நாட்டிற்கு ஒரே அம்மா என்றால் அது ஜெயலலிதா அம்மா மட்டும்தான். என்னை அக்கா என்று அழைத்தால் போதும். வயசுக்காக சொல்லவில்லை. ஏற்கனவே ஒரு அம்மா இருக்கிறார். தமிழ்நாட்டிற்கு ஒரே அம்மா ஜெயலலிதா அம்மாதான்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் மக்கள் வயிறு நிறைய கூடிய கூட்டணி. வாழை இலை போடுவதுபோல, இரட்டை இலை போட்டு, குக்கரில் நீங்கள் செய்யும் சாதத்தை சமைத்து, மாம்பழத்தோடு பரிமாறுவதற்கு சைக்கிளில் எடுத்துச் சென்று, மக்கள் மனது தாமரைபோல மலரும்போது, இரட்டை இலையில் பரிமாறி உங்களை மகிழ்விக்க வருகிறோம்” என்றார்.

summary

Senior BJP leader Tamilisai Tamilisai Soundararajan has said that don't call me "mother"; just call me "sister".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.