விசில் சத்தம் 200-ஐ தாண்டும் என்பது ஓவர்: தமிழிசை விமர்சனம்
தேர்தலில் தவெக 200-ஐ இடங்களைத் தாண்டுவது என்பதெல்லாம் கனவுதான் என பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 200-ஐ இடங்களைத் தாண்டுவது என்பதெல்லாம் கனவுதான் என பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் மயிலாப்பூர் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது, "விஜய் ஒரு நல்ல நடிகராக இருக்கலாம். ஆனால், குழந்தைகளைப் பிரசாரத்தில் ஈடுபடுத்தக் கூடாது என விதியில் இருக்கும்போது அவர்களை பெற்றோர்களிடம் அடம்பிடிக்கச் சொல்வது என்பது குழந்தைகளின் மனங்களில் தவறான கருத்துகளை விதைப்பது போன்றது.
இந்த வயதில் பிரசாரங்களுக்காக பழக்கினால், அவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படும் என்பதை விஜய் உணர வேண்டும். இவையெல்லாம் சுயநல அரசியலை நோக்கிச் செல்கிறதோ என அச்சமாக உள்ளது.
Advertisement
Advertisement
200 இடங்களுக்கும் அதிகமாக விசில் போகும் என்பதெல்லாம் ஓவரான சத்தம். செங்கோட்டையன் சொல்வதைப் பார்த்தால் விசில் சத்தம்போல் இல்லை, வெடிகுண்டு சத்தம் போன்றிருக்கிறது.
விசிலுக்கென ஒரு சத்தமிருக்கிறது, அதனைத் தாண்டி சத்தமெல்லாம் போட முடியாது. விசில் சத்தம், 200-ஐ தாண்டும் என்பது மிக பிரமாண்டமான கனவு.
கனவு காணுவதற்கு அத்தனை பேருக்கும் உரிமை இருக்கிறது. ஆகையால், நன்றாக கனவு காணட்டும். மிஞ்சிப் போனால், மே 4 வரையில் கனவு காணுவார்கள்" என்று தெரிவித்தார்.
BJP candidate Tamilisai Soundararajan criticized the TVK, stating that crossing the 200 seats in the election is merely a pipe dream.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.